எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பெண் தூக்கிட்டு சாவு: தற்கொலைக்குத் தூண்டியதாக கணவன், மாமியார் கைது

திருச்சி உறையூரில் திருமணமான 4 மாதத்தில் பெண் திங்கள்கிழமை தூக்கிட்டு உயிரிழந்தார். அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கணவன், மாமியாரை போலீஸர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :13 செப்டம்பர் 2016, 1:35 pm

கோபாலகிருஷ்ணன்

திருச்சி உறையூரில் திருமணமான 4 மாதத்தில் பெண் திங்கள்கிழமை தூக்கிட்டு உயிரிழந்தார். அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கணவன், மாமியாரை போலீஸர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

 திருச்சி உறையூர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் என்கிற முத்துக்குமார் (33). மாநகராட்சி துப்புரவு தொழிலாளி. இவருக்கும் தொட்டியத்தைச் சேர்ந்த திருமுருகன் - தொட்டியம் பேரூராட்சி கவுன்சிலர் உமாமகேஸ்வரி தம்பதியின் மகள் மாலதி (21)-க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. மாலதியிடம் கணவன் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

 இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி வீட்டில் மாலதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த மாலதியின் உறவினர்கள், வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி தில்லைநகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் மகளிர் காவல்நிலைய போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். திருமணமாகி 4 மாதத்தில் பெண் உயிரிழந்ததால் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ கணேஷ்குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில், வரதட்சணை கொடுமையால்தான் மாலதி தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்தது.
இதையடுத்து போலீஸôர், வரதட்சணை கொடுமை செய்து பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக முத்துக்குமார், இவரின் தாயார் அம்சவள்ளி (55) ஆகிய இருவரையும்  கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.